பேஸ்புக் பற்றிய தகவல்கள் | Facebook details in Tamil
பேஸ்புக் அல்லது முகநூல் (Facebook in Tamil) எனும் முகப்புத்தகத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகவும், அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு இணைய தளமாகவும் மாறிவிட்டது
சமூக வலைதளமான பேஸ்புக்கில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுவதோடு, செய்திகளை சீக்கிரமாகவும் இலகுவாகவும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
உலகத்தில், சந்தைப்படுத்தலில் மிக முக்கிய பங்கு பேஸ்புக்கிற்கு உண்டு. நன்மைகள் அதிகமாக இருந்தாலும்கூட, பிரதிகூலங்களும் அதிகம் உள்ளன. இனி பேஸ்புக் பற்றிய தகவல்களை (Facebook details in Tamil) விரிவாக பார்க்கலாம்.
ஆரம்பம் – Facebook details in Tamil
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவனான மார்க் சுக்கர்பெர்க் (Mark Zuckerberg) 2003 ஆம் ஆண்டு பேஸ்மாஸ் (Facemash) என்கிற ஒரு இணைய தளத்தை வடிவமைத்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் முக அழகை ஒப்பிடக்கூடியவாறான ஒரு தளமாக அது இருந்தது.
அத்தளத்தில் நிறைய மாணவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன்போது, முதல் 4 மணித்தியாலத்தில் 450 பார்வையாளர்கள் அத்தளத்தை பார்வையிட்டுள்ளதோடு, அதன் புகைப்படங்கள் 22,000 முறை பார்க்கப்பட்டுள்ளன.
எனினும், ஹார்வர்ட் நிர்வாகத்தால் அத்தளம் சில நாட்களிலேயே மூடப்பட்டது. அதற்கு காரணம், மார்க் பதிப்புரிமை (Copyright), பாதுகாப்பு (Security) மற்றும் தனிப்பட்ட தனியுரிமை (Privacy) மீறல் செய்ததால் ஆகும்.
இவ்வனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்ட பிறகும் கூட அவரது செயற்திட்டம் மேலும் தொடர்ந்தது. கலை வரலாறு (Art History) இறுதி பரீட்சைக்கு முன்னதாக ஒரு சமூக இணைய தளத்தை உருவாக்கினார்.
பின்பு அனைத்து கலை படங்களையும் (Art Images) அத்தளத்திற்கு பதிவேற்றம் செய்தார். அவற்றோடு, கருத்துக்கள் பிரிவும் (Comments Section) இணைக்கப்பட்டிருந்தன. பிறகு அவர் அத்தளத்தை தனது வகுப்பு நண்பர்களுடன் பகிர்ந்தார்.
2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தன் பல்கலைக்கழக மாணவரான, எட்வர்டோ சாவெரின் (Eduardo Saverin) என்பவருடன் இணைந்து thefacebook.com என்ற இணைய தளத்தை வடிவமைத்து ஆரம்பித்தார்.
இத்தளம் ஆரம்பித்து 6 நாட்களுக்கு பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்களான கெமரோன் வின்க்லேவோஸ் (Cameron Winklevoss), டைலர் வின்க்லேவோஸ் (Tyler Winklevoss) மற்றும் திவ்யா நரேந்திரா (Divya Narendra) ஆகியோர் HarvardConnection.com எனும் வலைத்தளத்தை உருவாக்க சுக்கர்பெர்க் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டினார்கள்.
மேலும், தங்களது யோசனையை கொண்டு அவர் தனது தயாரிப்பை உருவாக்கியுள்ளார் என உரிமை கோரிக்கைவிடுத்தார்கள். பிறகு சுக்கர்பெர்க் மீது வழக்கு தொடுத்தார்கள். பிறகு இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது.
டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் (Dustin Moskovitz), அண்ட்ரு மெக்கலம் (Andrew McCollum), க்ரிஸ் ஹுகேஸ் (Chris Hughes) ஆகியோர் இவ்விணையதளத்தின் வளர்ச்சிக்காக சுக்கர்பெர்க் உடன் இணைந்துகொண்டார்கள்.
2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலம்பியா (Columbia), ஸ்டான்ஃபோர்ட் (Stanford), யாலே (Yale) போன்ற பல்கலைக்கழகங்கள் வரை இத்தளம் விரிவானது.
பிறகு போஸ்டொன் பல்கலைக்கழகம் (Boston University), நிவ்யோர்க் பல்கலைக்கழகம் (New York University), எம்ஐடி (MIT – Massachusetts Institute of Technology) உட்பட அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் விரிவடைந்தது.
பின்பு நேப்ஸ்டர் (Napster) இணை நிறுவுனரான சீன் பார்க்கர் (Sean Parker) பேஸ்புக்கின் முதலாவது தலைவரானார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பேபல் (PayPal) நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான பீட்டர் தீல் (Peter Thiel) என்பவரிடமிருந்து முதலாவது முதலீட்டை பேஸ்புக் (Facebook in Tamil) நிறுவனம் பெற்றது.
Thefacebook.com என்று இருந்த முகப்புத்தகமானது 2005 ஆம் ஆண்டு த (the) அகற்றப்பட்டு 200,000 அமெரிக்க டொலர்களுக்கு டொமைன் (Domain) வாங்கப்பட்டு facebook.com என மாற்றப்பட்டது.
2005 ஆம் ஆண்டு மே மாதம் எக்சல் பார்ட்னர்ஸ் (Accel Partners) நிறுவனமானது 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தது. பிறகு ஜிம் பிரேயெர் (Jim Breyer) என்பவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தார்.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி 13 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமென்றாலும் ஒரு மின்னஞ்சல் முகவரியை வைத்து கணக்கு திறக்கக்கூடிய வசதியை பேஸ்புக் அளித்தது.
பேஸ்புக்கின் 1.6% பங்கை 240 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியதாக 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. அத்துடன் மைக்ரோசொப்ட் நிறுவனம் சர்வதேச விளம்பரப்படுத்தலுக்கான உரிமையையும் வாங்கியிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 500 மில்லியன் பயனர்கள் இருந்ததாக பேஸ்புக் (Facebook in Tamil) நிறுவனம் அறிவித்திருந்தது.
அச்சமயம் அவற்றில் அரைவாசியான பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 34 நிமிடங்கள் பாவிப்பதாகவும் 150 மில்லியன் பயனர்கள் மொபைல் சாதனங்களினூடாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது கூகுள் மற்றும் அமேசன் நிறுவனங்களுக்கு அடுத்த மூன்றாவது மிக பெரிய அமெரிக்க இணைய கம்பனியாக பேஸ்புக் நிறுவனம் வலம் வந்தது.
இணைய பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக பொய்யான செய்தி (Spam), வரைகலை உள்ளடக்கங்கள் (Graphic Content), வயது குறைந்தவர்கள் பயன்பாடு கொண்ட 20,000 கணக்குகளை அகற்றியதாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஊடக பார்வையாளர்களை அளவிடும் நிறுவனமான நீல்சன் (Nielsen) கம்பனியின் ஆய்வின்படி 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிகமாக நுழையப்பட்ட 2 வது இணையதளமாக பேஸ்புக் (Facebook in Tamil) இணையதளம் இருந்தது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இன்ஸ்டாகிராமை (Instagram) ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக் நிறுவனம்.
பேஸ்புக்கில் 600 மில்லியன் மொபைல் பயனர்கள் உள்ளிட்ட, மாதாந்தம் ஒரு பில்லியன் பயனர்கள் இருந்ததாக சுக்கர்பேர்க் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தார்.
க்ளிக் செய்யக்கூடிய ஹெஸ்டெக்கை (Hashtag) அறிமுகம் செய்வதாக 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேஸ்புக் (Facebook in Tamil) அறிவித்தது.
இதன் மூலம், ஒரு தலைப்பு சம்பந்தமாக தற்போது நடைமுறையில் உள்ள உரையாடல்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
அதன் பிறகு, அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஒனாவோ (Onavo) என்கிற இஸ்ரேலிய மொபைல் இணைய பகுப்பாய்வு கம்பனியை விலைக்கு வாங்கியது.
2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி WhatsApp ஐ 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது.
மார்ச் மாதம் ஒக்கியூலஸ் வீஆர் (Oculus VR) என்கிற மெய்நிகர் உண்மை (Virtual Reality) வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) உற்பத்திகளை தயாரிக்கின்ற தொழிநுட்ப கம்பனியை 2.3 பில்லியனுக்கு வாங்கியது
2015 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி வரை பொய்யான செய்திகள், கட்டுக்கதைகள் போன்ற பிழையான மற்றும் தவறான உள்ளடக்கங்களை வடிகட்டுவதற்காக பேஸ்புக்கின் வழிமுறையானது திருத்தப்பட்டது. எனினும், ஏளனம் செய்கின்றவாறான உள்ளடக்கங்கள் நிறுத்தப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயனர்களின் உள்நோக்கம் மற்றும் சூழலை தெரிந்துக்கொள்ளக்கூடிய இயற்கையான மொழி செயலாக்க AI (Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு) ஆன ஆழமான எழுத்து வடிவத்தை (Deep Text) அறிவித்தது பேஸ்புக்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம் வோர்க்ப்லேஸ் (Workplace) எனப்படும் கட்டண அடிப்படையிலான தகவல் தொடர்பு கருவி பற்றி தெரிவித்தது. இதன் மூலம், ஒரு கம்பனியில் உள்ள அனைவரும் தொடர்பில் இருக்க முடியும்.
மேலும், சக பணியாளரின் செய்தி ஊட்டத்தை பார்வையிடல் (News Feed), நேரடி வீடியோ போக்கு (Stream Live Video) மற்றும் பாதுகாப்பான குழுக்களில் அரட்டை (Group Chat) போன்றவற்றை மேற்கொள்ளவும் முடியும்.
ஒவ்வொரு மாதமும் 2 பில்லியன் மக்கள் பேஸ்புக்கில் இணைகிறார்கள் என்று 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி மார்க் சுக்கர்பேர்க் தெரிவித்தார்.
மேலும், தினமும் சராசரியாக 800 மில்லியன் மக்கள் பேஸ்புக்கில் எதையாவது லைக் (Like) செய்கிறார்கள் என்றும் மாதாந்தம் ஒரு பில்லியனுக்கு அதிகமான மக்கள் குழுக்களை பயன்படுத்துகிறார்கள என்றும் கூறினார்.
பிறகு ஆகஸ்ட் மாதம் வொட்ச் (Watch) எனும் புதிய தளத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக் (Facebook in Tamil).
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யதார்த்த நிகழ்ச்சிகள், நகைச்சுவை காட்சிகள், அரசியல், விளையாட்டு, சுகாதாரம் சம்பந்தமான வீடியோக்கள் உட்பட அனைத்து விதமான வீடியோக்களையும் இத்தளம் மூலம் பார்க்க முடியும்.
அசல் நிகழ்ச்சிகளுக்காக ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உடன் இணைந்து குறுந்தகவல் மற்றும் வீடியோ அரட்டை செய்யக்கூடிய மெசெஞ்சர் கிட்ஸ் (Messenger Kids) எனும் அப் (App) ஐ அறிமுகம் செய்வதாக டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி அறிவித்தது. இது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது சிறப்பம்சம் ஆகும்.
2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தரவு அழிப்பு கோரிக்கைகளுக்கு பதிலழிக்க தவறியதால் 500,000 பவுண்களை இங்கிலாந்து கண்கானிப்பு குழு பேஸ்புக்கிடமிருந்து அறவிட்டது.
நவம்பர் மாதம் 8 ஆம் திகதி போர்டல் மற்றும் போர்டல் ப்லஸ் (Portal and Portal+) என்கிற சாதனங்களை அறிமுகம் செய்தது பேஸ்புக் (Facebook in Tamil).
இவை வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் (Video Call) சாதனங்களாகும். இவற்றில் AI தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பேஸ்புக்கின் முகாமைத்துவ அங்கத்தவர்கள்
பெயர் | பதவி |
---|---|
தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி | மார்க் சுக்கர்பேர்க் |
தலைமை இயக்க அதிகாரி | ஜேவியர் ஒலிவன் (Javier Olivan) |
தலைமை தொழிநுட்ப அதிகாரி | ஆண்ட்ரூ போஸ்வொர்த் (Andrew Bosworth) |
தலைமை நிதி அதிகாரி | சூசன் லி (Susan Li) |
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 71,469 பணியாளர்கள் பேஸ்புக்கில் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள்
உலகம் முழுவதும் 21 தரவு மையங்களும் 93 அலுவலகங்ளும் உள்ளன.
பேஸ்புக் பெற்றுள்ள விருதுகள்
- 2007 ஆம் ஆண்டு சிறந்த 100 முதல் நிலையான வலைதளங்களிற்குள் இடம்பெற்றதற்காக பிசி மெகசினால் (PC Magazine) விருது வழங்கப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டு சர்வதேச கலை மற்றும் அறிவியல் கலைக்கழகத்திடமிருந்து (The International Academy of Digital Arts and Science) மக்களின் குரல் விருது (People’s Voice Award) என்ற தலைப்பில் வெப்பி விருதினை (Webby Award) பெற்றது.
- 2010 ஆம் ஆண்டு சிறந்த ஒட்டுமொத்த தொடக்க அல்லது தயாரிப்பு விருதை (Best Overall Startup Or Product Award) க்ரன்சியிடமிருந்து (Crunchie) பெற்றது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி சராசரியாக எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மாதாந்தம் 2.94 பில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.
பேஸ்புக்கில் அதிகளவு நன்மைகளும் உள்ளன. குறிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்கு முக்கியமான சமூக வலைதளமாக விளங்குகிறது. மேலும், பேஸ்புக்கில் சாதாரண பயனர்களாலும் வருமானம் ஈட்டக்கூடிய வசதிகளும் உள்ளன.
அதேபோல், நிறைய தீமைகளும் உள்ளன. முக்கியமாக தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுவதால் மற்றவர்களால் அவற்றை தவறான முறையில் பயன்படுத்த முடியும். குறிப்பாக, பெண்களின் பேஸ்புக் (Facebook in Tamil) கணக்குகளின் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.
எப்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை தெரிந்து அதற்கு ஏற்றவகையில் முகப்புத்தகத்தை பயன்படுத்துவது மிக சிறந்தது.
பேஸ்புக் பற்றிய தகவல்கள் (Facebook details in Tamil) நிறைந்த இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். இப்பதிவு பற்றிய கருத்துக்களையும் பேஸ்புக் பற்றிய உங்கள் கருத்தையும் கொமெண்டில் பதிவு செய்யுங்கள்.
மேலும் வாசிக்க
My name is Ganeshan Karthik. I am a blogger, YouTuber, and affiliate marketer. I design professional blogs and websites using WordPress. This is one of my websites about online learning. Please contact me if you need a professional website for your business. For more details visit: Webthik.com.