ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் | 10 Factors to consider when buying a smartphone in Tamil
நமது நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால், நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது.
அதேபோல், ஸ்மார்ட்போன்களில் ஆபத்துகளும் நிறைந்து இருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில், நாம் ஒரு புது ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் (10 Factors to consider when buying a smartphone in Tamil) எவை என பார்ப்போம்.
அதாவது, புது போன் வாங்குவதற்கான வழிகாட்டியாகவும் (Smartphone buying guide in Tamil) இதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
விலை – Factors to consider when buying a smartphone in Tamil
ஒரு புதிய கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்ய நினைக்கையில் முதலில் தீர்மானிக்க வேண்டியது விலை தான்.
அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அதன் விலைக்கேற்றவகையில் அவை கொண்டிருக்கும் வசதிகள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆகவே, ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்ய முன் முதலில் விலையை தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நாம் முடிவு செய்த பெறுமதிக்குறிய சிறந்த போனை வாங்கலாம்.
பிராண்ட் | Brand
தற்போது சந்தையில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), நோகியா (Nokia), சோனி (Sony) மற்றும் மேலும் பல பிரசித்திபெற்ற நம்பகரமான பிராண்டுகள் கிடைக்கின்றன.
அவற்றில் நமக்கு பிடித்தமான, பயன்படுத்துவதற்கு இலகுவான பிராண்டை தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால், சிலவேளை ஒரே விலையாக இருந்தாலும் வெவ்வேறு பிராண்டுகளில் வேறுபட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆகவே, பொருத்தமான சிறந்த பிராண்டை தெரிவு செய்தல் நல்லது.
இயக்கமுறைமை | Operating System
ஸ்மார்ட்போனை பொருத்தவரையில், இயக்கமுறைமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனென்றால், ஒவ்வொரு இயக்கமுறைமைக்கும் அதன் அம்சங்கள் வித்தியாசப்படும்.
பொதுவாக, ஆண்ட்ரொய்ட் (Android) மற்றும் ஐஓஸ் (iOS) ஆகிய இயக்கமுறைமைகள் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தவிர, மேலும் பல இயக்கமுறைமைகள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் ஆண்ட்ரொய்டின் பாவணை மிக அதிகம் என குறிப்பிட முடியும். இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இயக்கமுறைமையாகும். தனது ஸ்மார்ட்போனை பயனர் அவருக்கு பிடித்த மாதிரி தனிப்பயனாக்க (Customize) முடியும்.
அத்துடன், வேறுபட்ட திரை அளவு (Screen Size) மற்றும் வடிவங்களில் (Design) சந்தைக்கு வருவதால் அனைவருக்கும் கொள்வனவு செய்யக்கூடிய விலைகளில் கிடைக்கின்றன.
மேலும், ஆண்ட்ரொய்டில் அதிகளவான ஆப்கள் (Apps) பயன்படுத்த முடியும். ஆப்பிள் iOS ஐ பொறுத்தவரையில் தனிப்பயனாக்க முடியாது. எல்லோராலும் அதன் வசதிகளை எளிதில் புரிந்துகொள்ள சற்று கடினம்.
செயலி | Processor
ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் செயலி மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு சரியான செயலியை கொண்ட ஸ்மார்ட்போனை தெரிவு செய்யலாம்.
நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் சாதாரணமான பணிகளை மட்டும் செய்ய விரும்பினால் அதாவது, அழைப்புகளை மேற்கொள்ளல் (Calls), குறுந்தகவல்கள் (SMS) பறிமாற்றம், சில ஆப்களை பயன்படுத்தல் போன்றவாறான பணிகளை செய்ய விரும்பினால் சாதாரண செயலியை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானது.
அவ்வாறு இல்லாமல் புகைப்படம் மற்றும் கானொளிகள் தொகுப்பு (Edit) செய்தல், விளையாட்டுக்கள் விளையாடல், நிறைய ஆப்கள் பயன்படுத்தல், இணையத்தில் அதிகமாக உலாவுதல் போன்ற பணிகளை செய்ய எதிர்பார்த்தால் சிறந்த செயலியை கொண்ட போனை வாங்க வேண்டும்.
ஆண்ட்ரொய்ட் எனின், அதற்கு க்வால்கொம் ஸ்னெப்ட்ரேகன் (Qualcomm Snapdragon) வகை செயலிகள் சிறந்தவை. ஆப்பிள் செயலிகள் பொதுவாகவே சிறந்தவையாகும்.
ரெம் | RAM – Factors to consider when buying a smartphone in Tamil
ரெம் என்பது ஸ்மார்ட்போன் எப்போதும் வேகமாக செயற்படவும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவும் பயன்படும் நினைவகம் ஆகும்.
ரெம்மின் அளவு அதிகமாக இருக்கையில் போன் எப்போதும் ஒரே வேகத்தில் தாமதமாகாமல் செயற்படும். அத்துடன், பல ஆப்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், ஆப்கள் நாட்கள் செல்ல செல்ல புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றின் புதிய பதிப்பை (Version) நிறுவுகையில் (Install) அதை திறந்து பயன்படுத்த அதிக ரெம்மினை எடுத்துக்கொள்ளும்.
ஆகவே, ரெம் அதிகமாக இருக்கையில் மாத்திரமே போன் எப்போதும் வேகமாக செயற்படும். இக்காலத்தில் 8GB க்கு மேல் இருக்கும் போன்களை பயன்படுத்துவது நல்லது.
திரை | Display
புது போன் வாங்குவதற்கான வழிகாட்டி (Smartphone buying guide in Tamil) எனும் இந்த பதிவில் அடுத்து நாம் ஸ்மார்ட்போனின் திரையை பற்றிதான் பார்க்கபோகிறோம்.
ஸ்மார்ட்போனில் நாம் முழுமையாக பயன்படுத்துவது இந்த திரையை தான். ஆகவே, இந்த திரையானது மிக சிறப்பானதாக அமைய வேண்டும்.
திரையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் புதுப்பிப்பு விகிதம், நிட்ஸ் அளவு, வர்ணம், அளவு, பாதுகாப்பு ஆகியவைதான்.
திரையின் புதுப்பிப்பு விகிதம் தற்போதைய நிலைக்கு 90Hz ஐ விட அதிகமாக இருத்தல் நல்லது. காரணம் புதுப்பிப்பு விகிதம் அதிகமாக இருக்கும் போது தொடு திரையை பயன்படுத்துகையில் மிக மிருதுவாக பயன்படுத்த முடியும்.
நீங்கள் வெளிச்சம் நிறைந்த இடங்களில் போனை பயன்படுத்த வேண்டியிருந்தால், கண்டிப்பாக நிட்ஸ் அளவு 800 மேல் இருப்பது சிறப்பாகும்.
அத்துடன், குறைந்தது 16 மில்லியன வர்ணங்களை காட்சிப்படுத்தக்கூடிய திரையை கொண்ட ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.
நீங்கள் கேம்ஸ் விளையாடுபவர்களாக இருந்தால் அல்லது திரைப்படங்களை போனிலேயே பார்ப்பவராக இருந்தால் அளவு சற்று அதிகமாக உள்ள திரையை கொண்ட போனை வாங்குவது இலகுவாக இருக்கும்.
அதேபோல, கண்ணாடியின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். கோர்னிங் கொரில்லா கண்ணாடி(Corning Gorilla Glass) அல்லது ஸ்கொட் சென்சேஷன் கண்ணாடி (Schott Xensation Glass) பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனை மறக்காமல் வாங்குங்கள்.
சேமிப்பகம் | Storage
ஸ்மார்ட்போனில் ஆப்கள், புகைப்படங்கள் (Images), கானொளிகள் (Videos), ஆவணங்கள் (Documents) போன்ற அனைத்தையும் சேமித்து வைக்க சேமிப்பகம் உதவுகிறது.
தற்போது, நாம் அனைத்துவிதமான கோப்புகளையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துவைத்துள்ளோம். காரணம் நமது அவசர வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் எளிதில் செய்து முடிப்பதற்காகும்.
அத்துடன், பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் சேமித்துவைத்திருப்போம். மேலும், புகைப்படங்கள் எடுக்கையில், கானொளிகள் பதிவு செய்கையில் அதிக இடவசதி தேவைப்படும்.
ஆகவே, சேமிப்பகம் அதிகமாக இருக்கும் மொபைல் போனை கொள்வனவு செய்வது சிறந்தது. குறைந்தது 128GB சேமிப்பகம் கொண்ட போனை கொள்வனவு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
மின் கலம் | Battery
நாம் அதிகமாக போனை பயன்படுத்தும் பொழுது மின்சக்தி சீக்கிரமாக குறைந்து கொண்டே இருக்கும்.
கானொளிகள் பார்க்கும் போது, கேமரா அதிகமாக பயன்படுத்தும், போது இணையத்தில் உலாவும் போது அதிக மின்சக்தி பயன்படுத்தப்படும்.
ஆகவே, அதிக மின்சக்தியை சேமித்து வைக்கக்கூடிய மின்கலத்தை கொண்ட போனை வாங்க வேண்டும்.
சாதாரணமாக 5000mAh அளவை கொண்ட ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்தால் அதிக நேரம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மேலும், விரைவான மின்னூட்டம் (Fast Charging), எதிர்புறமான மின்னூட்டல் (Reverse Charge) போன்ற உயர்ந்த தொழினுட்பங்களை கொண்ட வசதியுள்ள போனாக இருந்தால் இந்த காலத்திற்கு மிக உகந்ததாக இருக்கும்.
பாதுகாப்பு | Security – Factors to consider when buying a smartphone in Tamil
தற்போது ஸ்மார்ட்போன்களில் பலவகையான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கைரேகை (Fingerprint), முக அடையாளம் (Face ID), கண்கருவிழி (Iris) ஆகியவற்றை கொண்டு திறத்தல், கடவுச்சொல் (Password) மூலம் திறத்தல் போன்ற முறைகளினால் தற்போது போனை திறக்கக்கூடிய (Unlock) வசதிகள் உண்டு.
அவற்றில் கடவுச்சொல் மூலம் திறப்பதே மிகவும் சிறந்தது. ஏனென்றால், மேலே குறிப்பிட்ட மற்ற முறைகளின் மூலம் நீங்கள் தூங்கும் போது அல்லது நிதானத்தில் இல்லாத சந்தர்ப்பங்களில் மற்றவர்களால் உங்களது போனை எளிதில் திறந்து பயன்படுத்த முடியும்.
அதை கவனத்தில் வைத்திருத்தல் வேண்டும். தற்போதெல்லாம் ஒவ்வொரு ஆப்பையும் பூட்டக்கூடிய (Lock) வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்வாறான அம்சங்கள் கொண்ட போன் என்றால் தனிப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
கேமரா | Camera
ஸ்மார்ட்போனில் எவ்வசதி எவ்வாறு இருந்தாலும் நாம் முதலில் பார்ப்பது, கேமரா நன்றாக உள்ளதா என்று தான். காரணம் செல்பி (Selfie) நன்றாக இருக்கவேண்டும் என்ற ஆர்வம் தான்.
ஆகவே, மெகாபிக்ஸல் (Mega Pixels) அதிகமாக உள்ள போனை கொள்வனவு செய்தால் ஆசைபடும் வகையில் அழகான வண்ணம் நிறைந்த புகைப்படங்கள் மற்றும் கானொளிகளை பதிவு செய்ய முடியும்.
தற்போது நீங்கள் வாசித்த இந்த புது போன் வாங்குவதற்கான வழிகாட்டியானது (Smartphone buying guide in Tamil) உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
மேலே குறிப்பிட்ட அனைத்து காரணிகளும் கண்டிப்பாக விலையில் தங்கியுள்ளன.
ஆகவே, முதலில் உங்களால் செலவு செய்யக்கூடிய பணத்தை கருத்தில் கொண்டு அந்த விலைக்கு அதிகபட்ச வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனை ஆராய்ந்து கொள்வனவு செய்தல் மிக நல்லது.
அதற்கு மாறாக விலை முக்கியம் இல்லை சிறந்த போனை தான் கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், தற்போது சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்வது சாலச்சிறந்தது.
ஸ்மார்ட்போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய 10 விடயங்கள் (10 Factors to consider when buying a smartphone in Tamil) தொடர்பான இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் . மேலும், உங்களது கருந்துக்களை கொமண்டில் பதிவிடவும்.
மேலும் சில பயனுள்ள தகவல்கள்
My name is Ganeshan Karthik. I am a blogger, YouTuber, and affiliate marketer. I design professional blogs and websites using WordPress. This is one of my websites about online learning. Please contact me if you need a professional website for your business. For more details visit: Webthik.com.