இன்றைய நவீன கால கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒரு தேவையான விடயமாக மாறிவிட்டது.
ஏனென்றால், மிக இலகுவாக உள்ளது; சிறந்த சலுகைகள் கிடைக்கக்கூடியதாக உள்ளது; பெருமளவில் தெரிவுசெய்து வாங்கக்கூடியதாக உள்ளது என்பதனாலாகும்.
நீங்கள் இப்பொழுது தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போகிறீர்களா அல்லது ஆன்லைன் ஷாப்பிங் பற்றி மேலும் அறிந்துகொள்ள நினைக்கிறீர்களா அப்படியென்றால், இப்பதிவு உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
வாருங்கள்! இப்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி (Online Shopping Seivathu Eppadi) என்று விளக்கமாக பார்க்கலாம்.
சிறந்த ஷாப்பிங் தளத்தை அல்லது ஆப்பை தெரிவு செய்தல்
முதலில் என்னசெய்யவேண்டுமென்றால், ஒரு சிறந்த நம்பகரமான ஒரு தளத்தை அல்லது ஆப்பை (Apps) தெரிவுசெய்ய வேண்டும்.
அத்தளம் அல்லது ஆப் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்கக்கூடியதாகவும் கொடுக்கல் வாங்கல்களை மிக பாதுகாப்பான முறையில் செய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
சில சிறந்த நம்பகரமான தளங்களை கீழே பார்க்கலாம்.
- அமேசான் (Amazon) – அனைத்து விதமான பொருட்களையும் பெற்றுக்கொள்ள சிறந்தது
- அலிஎக்ஸ்பிரஸ் (AliExpress) – சலுகைகளுடன் பொருட்களை பெற்றுக்கொள்ள சிறந்தது.
- ஹோஸ்டிங்கர் (Hostinger) – சிறந்த வெப் ஹாஸ்டிங் தளம்
நீங்கள் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பற்றி அறிந்துகொள்ள நினைக்கிறீர்கள் என்றால் அதற்கு Smart Tamil Trend என்ற எமது வலைத்தளத்திற்கு அடிக்கடி பயணியுங்கள்.
அதன் மூலம் சிறந்த பொருட்களையும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம், உங்களுக்கு அதிகளவான பணத்தை சேமிக்க முடியும்.
சிறந்த பொருளை தேடி தெரிவு செய்தல்
நீங்கள் ஒரு தளத்தை தெரிவு செய்ததற்கு பிறகு அத்தளத்தில் உள்ள சேர்ச் பாரில் (Search Bar) உங்களுக்கு தேவையான பொருளை தேடி தெரிவுசெய்யுங்கள்
விலையை ஒப்பிடல் மற்றும் விமர்சனங்களை வாசித்தல்
நீங்கள் தெரிவுசெய்த பொருளின் விலையை மற்ற நம்பகரமான தளங்களின் பொருட்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். அத்துடன், அப்பொருள் பற்றிய விமர்சனங்களையும் (Reviews) நன்கு வாசியுங்கள்.
அதாவது, அப்பொருளை பற்றி அதை கொள்வனவு செய்த மற்றவர்கள் பதிவுசெய்துள்ள கருத்துக்களை நன்கு கவனித்து பாருங்கள்.
அத்துடன், அப்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டின் (Rating) அளவையும் கருத்தில் கொள்ளுங்கள்.
கார்ட்டில் சேர்த்தல் மற்றும் செக்வுட் செய்தல்
பொருளை தெரிவுசெய்ததுக்கு பிறகு Add to Cart அல்லது Buy Now பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அதன் பின் அதிலுள்ள தகவல்களை நன்கு பரிசீலித்து பாருங்கள்.
ஷிப்பிங் மற்றும் கட்டண விபரங்களை வழங்குதல்
பொருள் அனுப்பப்பட வேண்டிய முகவரியை சரியாக வழங்குங்கள். அத்தோடு, உங்களுக்கு பொருத்தமான கட்டண முறையை தெரிவுசெய்து அதற்கான விபரங்களையும் வழங்குங்கள்.
பொதுவாக பயன்படுத்தப்படும் கட்டண முறைகள்
- கேஸ் ஒன் டெலிவரி (Cash on Delivery)
- கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் (Credit and Debit Card)
- பேபால் (PayPal)
- டிஜிட்டல் வாலட்டுகள் (Digital Wallets)
கூப்பன்கள் மற்றும் கழிவுகளை பயன்படுத்தல்
பெரும்பாலான இலத்திரனீயல் வணிக தளங்கள் சில பொருட்களுக்கு கூப்பன்களையும் கழிவுகளையும் வழங்கும்.
அவ்வாறு கொடுக்கப்படும் பொருட்களுக்கு கூப்பன் அல்லது கழிவை பயன்படுத்தி பணத்தை சேமித்துக் கொள்ளலாம்.
ஆர்டரை உறுதி செய்தல்
கட்டண விபரங்களை வழங்கிய பின் வரும் Place Order அல்லது Confirm Order எனும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
அதற்கு முன்னதாக, நீங்கள் வழங்கிய அனைத்து விபரங்களும் சரியா என ஒரு முறை பரிசீலித்த பாருங்கள்.
உங்களது ஆர்டரை கண்காணித்தல்
அநேகமான வலைத்தளங்கள் பொருளை கண்காணிக்கும் (Track) சிறப்பம்சத்தை வழங்குகின்றன.
நீங்கள் பொருளை கொள்வனவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சம் வந்து சேரும். அதில் அனைத்து விபரங்களுடன் கண்காணிப்பதற்கான விபரங்களும் வழங்கப்பட்டிருக்கும்.
அதன் மூலம், உங்களது பொருள் தற்போது எவ்விடத்தில் உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள முடியும்.
பொருளை பெற்றுக் கொள்ளல் மற்றும் சரிபார்த்தல்
நீங்கள் கொள்வனவு செய்த பொருள் உங்கள் முகவரிக்கு வந்து சேர்ந்ததும் அப்பொருள் சரியாக வந்துள்ளதா என பாருங்கள்.
அதாவது, பொருள் சேதமடையாமல் நல்ல தரத்தில் உள்ளதா, நீங்கள் தெரிவு அளவு, நிறம் எல்லாம் சரியாக உள்ளதா என சரிபார்ப்பது அவசியமாகும்.
அவ்வாறில்லாமல் இருப்பின், அப்பொருளை திருப்பி அனுப்பி அதற்கு வேறுபொருளோ அல்லது பணத்தையோ மீண்டும் பெற வேண்டும்.
முடிவுரை – Online Shopping Seivathu Eppadi
ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிக இலகுவான, பாதுகாப்பான, வசதியான முறையாக உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்யுங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எப்படி (Online Shopping Seivathu Eppadi) என்ற விளக்கமான இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
உங்களது கருத்துக்களை கீழே பதிவிடவும். அத்துடன், புதிய அப்டேட்ஸ்களுக்கு எமது சமூக வலைத்தளங்களை (Facebook, X, Instagram, YouTube, and Pinterest) Follow செய்யுங்கள்