இன்றைய காலகட்டத்தில் கைத்தொலைபேசிகள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டது. நமது அநேகமான வேலைகளை அதன் மூலம் இலகுவாக செய்துகொள்ளக்கூடியதாக இருப்பது தான் அதற்கு காரணம்.
கைத்தொலைபேசிகளில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே மாதிரி தீமையும் உண்டு. அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் அதனால், நமக்கு ஆபத்து கூட நிகழலாம்.
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் (Reasons to explode smartphones in Tamil) என்னவென்று இனி பார்ப்போம்.
1. மின்கலம் (Battery) பழுதாகுதல் – Reasons to explode smartphones in Tamil
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகள் கீழே விழுவதற்கும் மோதுதல்களுக்கு உட்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு விழும் போது அல்லது மோதும் போது கைத்தொலைபேசியில் உள்ள மின்கலம் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.
சிலவேளை மின்கலம் பாதிப்படைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.
அவ்வாறு கை தவரி கீழே விழும் போது அல்லது மோதப்படும் பொழுது மின்கலத்தின் உட்பக்க இயந்திர இயக்கம் (Internal Mechanical) அல்லது மின்கலத்தின் இரசாயண அமைப்பு (Chemical Structure) மாற்றப்படலாம்.
இவ்வாறு நிலை மாற்றப்பட்டு அதனால், ஏற்படும் உயர் அழுத்தம் காரணமாக மின்கலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு மின் சுற்றமைப்பு (Safe Circuitry) தொழிற்படமுடியாமல் போகும். இதன்போது வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு மின்கலம் பாதிப்படைந்திருப்பின் எவ்வாறு அறிந்து கொள்வது என்று பார்ப்போம்.
- வீக்கமடைந்திருத்தல்
- உருச்சிதைவு ஏற்பட்டிருத்தல். அதாவது அதன் உருவம் மாற்றப்பட்டிருத்தல்.
- அடிக்கடி அளவுக்கு அதிகமாக சூடாகுதல்.
மின்கலத்தில் இவ்வாறான அறிகுறிகள் காணப்படின் உடனடியாக மின்கலத்தை மாற்றுவது மிக நல்லது.
2. வெப்பமாகுதல் மற்றும் வெப்பமான சூழல் – Reasons to explode smartphones in Tamil
தற்போது விற்பனையாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் மின்கலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இருந்தாலும் கூட, அதிக வெப்பம் உண்டாக்கினாலும் அல்லது அதிக வெப்பத்தால் போன் தானாகவே நின்றுபோனாலும், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், வெடிப்பதற்கான வாய்ப்பு உண்டு. இயற்கையாகவே ஸ்மார்ட்போன் வெப்பமாவதற்கு சில காரணங்கள் உண்டு.
- தீவிரமான வரைகலை (Graphics) இயக்கத்தினால் அதிகமான வேலை பளு காரணமாக வரைகலை செயலாக்க அலகு (Graphics Processing Unit (GPU)) அதிகமாக தொழிற்படல்
- ஆப்ஸ்கள் (Apps) அதிகமாக மத்திய செயலாக்க அலகை (Central Processing Unit (CPU)) பயன்படுத்தல்
- நீங்கள் பல பணிகளை செய்யும் போது தொடர்ச்சியாக விட்ஜெட்கள் (Widgets) தொழிற்படல்
- ஸ்மார்ட்போனின் இணைப்பானது (Connectivity) தொடர்ச்சியாக செல்யூலர் டேடா (Cellular Data) அல்லது வைபை இணைப்பு (Wi-Fi Connection) பற்றி ஆராய்தல்.
- நீண்ட நேர தொலைபேசி உறையாடல்கள் (Calls)
சாதாரணமாக இதெல்லாம் இவ்வாறு இருக்க ஸ்மார்ட்போன் வெப்பம் நிறைந்த ஒரு சூழலிலோ அல்லது சூரிய ஒளி நேரடியாக ஸ்மார்ட்போனின் மீது விழும் வேலையிலோ அதிகமாக வெப்பமடையும்.
அச்சந்தர்ப்பத்தில் நீங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது வெப்பம் காரணமாக இயங்க முடியாமல் இருக்கும்.
இவ்வாறு வெப்பம் அதிகமாகும் போது வெடிப்பதற்கான அதிக வாய்ப்பு உண்டு. அத்துடன் மின்கலத்தின் பாவணையும் பாதிக்கப்படும்.
ஸ்மார்ட்போன் அளவுக்கு அதிகமாக வெப்பமாவதை சில வழிகள் மூலம் தடுக்கலாம்.
- போனை சார்ஜ் (Charge) செய்யும் போது மேலுறையை (Cover) அகற்றல்
- முடிந்த அளவு ஸ்மார்ட்போன் மீது நேரடியாக சூரிய ஒளி படாமல் வைத்தல்
- வெப்பமான இடங்களில் போனை வைக்காமல் இருத்தல்
- சட்டைபை அல்லது பை அல்லது வெப்பம் வெளியிடப்படாத வேறு எந்த ஒரு இடத்திலும் வைத்து சார்ஜ் செய்யாமல் இருத்தல்
3. பொருத்தமில்லாத சார்ஜர் பயன்படுத்தல் – Reasons to explode smartphones in Tamil
நீங்கள் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதனுடன் வரும் சார்ஜர் தான் சிறந்த சார்ஜராக இருக்கும்.
ஆகவே, அந்த சார்ஜர் மூலம் எந்த பாதிப்பும் வராது. ஆனால், அந்த சார்ஜர் எந்த வகையிலாவது பழுதடைந்திருந்தால், அதே வோல்ட் (Volt) அளவு கொண்ட புதிய அசல் (Original) சார்ஜரை கொள்வனவு செய்து பயன்படுத்த வேண்டும்.
அதற்கு மாறாக சந்தையில் விலை குறைவாக கிடைக்கும் சார்ஜரை பயன்படுத்த கூடாது.
ஏனெனில், அவை சிறந்த மூலப்பொருள்களால் உற்பத்தி செய்யப்பட்டிருக்காமல் இருக்கலாம் அல்லது பொருத்தமான வோல்ட் அளவை கொண்டிருக்காமல் இருக்கலாம்.
அதுமட்டுமன்றி, மற்ற பிராண்ட் (Brand) ஸ்மார்ட்போன்களின் அசல் சார்ஜரை கூட பயன்படுத்த கூடாது.
ஏனென்றால், ஒவ்வொரு போனிற்கும் அதன் வோல்ட் அளவு வித்தியாசப்படும். ஒரே அளவு வோல்டேஜ் என்றால் பரவாயில்லை.
ஆகவே, வோல்ட் அளவு வித்தியாசப்படுகையில் அந்த போனிற்கு சரியான வோல்டை விட குறைவாக இருந்தால், மின்கலம் பாதிக்கப்படும். சார்ஜ் ஆவதற்கு அதிக நேரமாகும்.
அதேபோல, அந்த போனிற்கு தேவையான வோல்ட் அளவை விட அதிகமான வோல்டேஜ் கொண்ட சார்ஜராக இருப்பின், கைத்தொலைபேசியின் மின்சுற்று உருகவும் வாய்ப்புண்டு. இவ்வாறு எல்லாம் பாதிப்புகள் ஏற்படும் போது போன் வெடிக்கும்.
4. போன் நனைந்து இருத்தல் – Reasons to explode smartphones in Tamil
சாதாரணமாக லித்தியம் (Lithium) நீராவி அல்லது நீருடன் இணையும் போது தீப்பற்றி எரியக்கூடியது.
பெரும்பாலும் மின்கலம் நன்கு அடைக்கப்பட்டு தான் இருக்கும். எனினும், நனைந்த போனை பயன்படுத்தும் போது நன்கு அவதானித்து பயன்படுத்த வேண்டும்.
நன்றாக உலர்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், மின்கலம் நனைந்து லித்தியத்துடன் நீர் படும் பொழுது தீப்பற்றி வெடிக்கும்.
தற்போது வெளிவரும் நிறைய நவீன போன்கள் நீர் உட்செல்லாதவாறு (Water Resistant) அமைக்கப்பட்டுகின்றன. அவ்வகையான போன்களில் எந்த பிரச்சினையும் இருக்காது.
ஆனால், மற்ற போன்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக பயன்படுத்துதல் சிறந்தது.
5. மின்கலத்தில் துளை ஏற்பட்டிருத்தல் – Reasons to explode smartphones in Tamil
லித்தியம் நீருடன் மட்டுமல்லாமல் ஆக்ஸிஜனோடும் (Oxygen) விரைவாக தாக்கத்தில் ஈடுபடக்கூடியது.
ஸ்மார்ட்போன் விபத்துக்குள்ளாகும் போது அல்லது மோதுதல்களுக்கு உட்படும் பொழுது மின்கலத்தில் சிறு துவாரங்கள் ஏற்பட்டால், வளியில் இருக்கும் ஆக்ஸிஜனுடன் மிக விரைவாக தாக்கம் புரிந்து வெடிக்கும்.
ஆகவே ஸ்மார்ட்போனை கவனமாகவும் அவதானத்துடனும் பயன்படுத்து வேண்டும்.
பாதுகாப்பில்லாத போன்களை தவிர்ப்பதன் மூலம் பாரிய ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து கொள்ளமுடியும்.
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதனால் பாரிய காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அகவே சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுவோமாக.
மேலும் வாசிக்க: